மோட்டோரோலா ஒன் பவர் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுக தேதி

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #MotorolaOnePower
மோட்டோரோலா ஒன் பவர் அதிகாரப்பூர்வ இந்திய அறிமுக தேதி
Published on

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பெர்லின் நகரில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட்கள் வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்

- அட்ரினோ 509 GPU

- 3 ஜிபி, 4 ஜிபி ரேம் 

- 32 ஜிபி, 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

- 12 எம்.பி. செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

- டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com