அகலமான ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் சியோமி

இதில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Representative Image: Xiaomi 18 Fold
Published on: 

ஸ்மார்ட்போன் சந்தையில் அகலமான திரை கொண்ட போன்கள் புதிய டிரெண்டாக மாறக்கூடும்; பல நிறுவனங்கள் இத்தகைய வடிவமைப்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. 2026-ஆம் ஆண்டில், சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 8, ஐபோன் டுயோ மற்றும் சியோமி 18 ஃபோல்டு போன்ற அகலமான திரை கொண்ட மடிக்கக்கூடிய போன்கள் அறிமுகமாகின.

சமீபத்தில் கசிந்த தகவல்களின்படி, இந்த வடிவமைப்பு விரைவில் பொதுவான ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. அந்த வகையில், சியோமி நிறுவனமும் அகலமான திரை கொண்ட ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் பரிசோதனை செய்து வருவதாக தெரிகிறது.

சியோமியின் அகலமான திரை கொண்ட ஸ்மார்ட்போன்:

'டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்' எனும் டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்களின் படி அகலமான, ஸ்டிரெயிட் டிசைன் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒன்று டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவர் வெளியிட்ட தகவல்களில் ஸ்மார்ட்போன் எந்த பிரான்டு என்பதை பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சில குறிப்புகள் அது சியோமி நிறுவனத்தை பற்றியே இருக்கலாம் என்று உணர்த்துகின்றன.

இத்தகைய அகலமான திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள், வழக்கமான போன்களில் இருந்து மாறுபட்டு, அகலமான 'ஆஸ்பெக்ட் ரேஷியோ' கொண்டிருக்கும். தற்போது பயன்படுத்தும் நீளமான வடிவமைப்புக்கு மாறாக, இவை சற்று பெட்டி போன்ற (boxy) அமைப்பை கொண்டிருக்கும்.

இது சியோமி 18 ஃபோல்ட் போன்ற மடிக்கக்கூடிய போன்களின் அகலமான திரையை ஒத்திருக்கும், ஆனால் இது மடிக்க முடியாத சாதாரண ஸ்மார்ட்போனாக இருக்கும். அகலமான திரை வடிவமைப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யவும், டைப் செய்யவும், வாசிக்கவும் மிகவும் வசதியாக இருக்கும்.

சந்தையில் புது டிரெண்ட்:

சியோமி மட்டுமல்லாமல், ஒப்போ நிறுவனமும் 16:9 அல்லது 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட அகலமான ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் காலங்களில் அகலமான திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஒரு புதிய டிரெண்டாக மாறக்கூடும்.

தற்போது 'டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்' மூலம் ஆரம்பகட்ட தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளன; போனின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சியோமி தனது இந்த அகலமான திரை கொண்ட போனுக்காக என்ன திட்டமிட்டுள்ளது என்பதை அறிய, மேலும் சில கசிந்த தகவல்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

X