

விவோ நிறுவனத்தின் Y500 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக கூகுள் பிளே கன்சோலில் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்த நிலையில், தற்போது விவோ Y500 4ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் AMOLED பேனல் மற்றும் 1.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8100mAh புளூவோல்ட் பேட்டரி வழங்கப்படுகிறது.
விவோ Y500 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் 4ஜி வெர்ஷனில் "ultra-smooth processor," வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போன் செங்குத்தாக பொருத்தப்பட்ட கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் இது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் மேலும் சில நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். மற்றும் 8 ஜி.பி. ரேம் இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும்.
விவோ Y500 ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68+IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கிடைக்கும்.