

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X300 FE ஸ்மார்ட்போன் விலையை திடீரென உயர்த்தியது. அதன்படி தற்போது விவோ X300 FE ஸ்மார்ட்போனின் விலை ரூ. 89,999 என மாறியுள்ளது. இது ஸ்மார்ட்போனின் அறிமுக விலையை விட ரூ. 10,000 அதிகம் ஆகும்.
இந்திய சந்தையில் விவோ X300 FE ஸ்மார்ட்போன் கடந்த மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஸ்மார்ட்போனின் விலை பல முறை மாற்ற்பட்டது. இதுதவிர விவோ நிறுவனம் X300 FE ஸ்மார்ட்போனின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விலை உயர்வின் படி விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 86,999-இல் இருந்து ரூ. 89,999 என மாறியுள்ளது. இதே போல் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 96,999-இல் இருந்து ரூ. 99,999 என மாறியுள்ளது.
புது வெர்ஷனை பொருத்தவரை டிப்ஸ்டர் சஞ்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விவோ X300 FE ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதிய விவோ X300 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 84,999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
விவோ X300 FE ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் LTPO 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர், 6500mAh பேட்டரி, 90 வாட் வயர்டு ஃபிளாஷ் சார்ஜ், 40 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் வசதியுடன் வருகிறது.
மேலும், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது.