

விவோ நிறுவனம் தனது T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் விவோ விரைவில் தனது T5 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஏற்கனவே விவோ நிறுவனம் விவோ T5 லைட் 5ஜி, விவோ T5x 5ஜி மற்றும் விவோ T5 ப்ரோ 5ஜி என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
மூன்று ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விவோ தற்போது T சீரிசில் ஸ்டான்டர்டு மாடலாக T5 அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது. மேலும், இந்த மாடலின் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களை விவோ வெளியிட்டுள்ளது.
புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் வகையில், ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய விவோ T5 ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓ.எஸ். சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். 6 கொண்டிருக்கும் என டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விவோ T5 ஸ்மா்ட்போன் ஜென்-ஏ.ஐ. ரெடி நியூரல் பிராசஸிங் யூனிட் கொண்டிருக்கும் என்றும் இது அதிவேக ஏ.ஐ. செயல்திறன் வழங்குவதை உறுதிப்படுத்தும். வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை தெரிவிக்கும் டீசர்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
விவோ T5 5ஜி ஸ்மார்ட்போன் இந்த பிரிவில் மிக மெல்லிய 3டி கர்வ்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 50,000-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
விவோ T5 5ஜி ஸ்மார்ட்போன் 7.99 மில்லிமீட்டரில் மிக மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் விவோ நிறுவனம் தனது T5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 7000 வரை உயர்த்தியது. இதனால் விவோ T5 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 41,999 என மாறி இருக்கிறது.