

சியோமி 18 ப்ரோ சீரிஸ் மாடல்கள் சமீபத்தில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் சியோமி 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இவற்றின் இந்திய வெளியீட்டு தேதியை சியோமி நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்களில் சியோமி 18 ப்ரோ மாடலின் இந்திய விலை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், வரவிருக்கும் புதிய 'அல்ட்ரா-பிரீமியம்' பிரிவில் இடம்பெறும்.
எக்ஸ் தளத்தில் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) என்பவரின் கூற்றுப்படி, இறக்குமதி வரிகள் உட்பட, இந்தியாவில் சியோமி 18 ப்ரோ மாடலின் விலை ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 1.7 லட்சம் வரை இருக்கலாம். இருப்பினும், இந்த விலைக்கு எந்த அளவிலான ரேம் (RAM) மற்றும் மெமரி (storage) வசதிகள் கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இந்த விலை பிரிவில், சியோமி 18 ப்ரோ மாடல் அல்ட்ரா-பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் போட்டியிடும். அதே சமயம், ரூ. 1,99,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமான ஒப்போ ஃபைண்ட் X10 ப்ரோ மேக்ஸ் போன்ற சில போட்டியாளர்களை விட இது சற்று குறைந்த விலையில் இருக்கலாம்.
தற்போதைய தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவிற்கான இந்த விலை, சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையை விட அதிகமாக உள்ளது. சீனாவில், 12GB ரேம் மற்றும் 256GB மெமரி கொண்ட சியோமி 18 ப்ரோ மாடல் CNY 5,999 (சுமார் ரூ. 86,000) விலையில் தொடங்குகிறது.
இதன் 12GB + 512GB மற்றும் 16GB + 512GB மாடல்கள் முறையே CNY 6,999 (சுமார் ரூ. 1 லட்சம்) மற்றும் CNY 7,999 (சுமார் ரூ. 1.14 லட்சம்) விலையில் கிடைக்கின்றன. 16GB ரேம் மற்றும் 1TB சேமிப்பகம் கொண்ட உயர்தர மாடல் CNY 8,999 (சுமார் ரூ. 1.29 லட்சம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில உலகளாவிய சந்தைகளில், 12GB + 256GB கொண்ட Xiaomi 18 Pro மாடல் EUR 1,399 (சுமார் ரூ. 1.44 லட்சம்) என்ற விலையில் தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 12GB + 512GB பதிப்பின் விலை 1,599 யூரோக்கள் (சுமார் ரூ. 1.64 லட்சம்) ஆகும்.
எனவே, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை, சர்வதேச சந்தையில் உள்ள அதிக மெமரி கொண்ட பதிப்பின் விலைக்கு நெருக்கமாக இருக்கும் என்று தெரிகிறது.