ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? டெக்னோ அசத்தல்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது. இதில் 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களா? டெக்னோ அசத்தல்
Published on

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.56 இன்ச் HD+ டாட்-இன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 20 பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 போன்ற வசதிகள் உள்ளன.

டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள்:

6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

ARM மாலி G52 GPU

8 ஜி.பி. ரேம்

256 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

யு.எஸ்.பி. டைப் சி

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக், சைபர் வைட், நியான் கோல்டு மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (புளூ) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com