கிட்டத்தட்ட ஐபோன் மாதிரியே இருக்கு.. ரூ.6 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
கிட்டத்தட்ட ஐபோன் மாதிரியே இருக்கு.. ரூ.6 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

டெக்னோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக்னோ பாப் 9 என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி50 பிராசஸர், 3 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

நோட்டிபிகேஷன்களுக்காக இந்த ஸ்மார்ட்போனில் டைனிக் போர்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், IR சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் வசதி வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரய்டு 14 கோ எடிஷன் சாார்ந்த ஹை ஓஎஸ் 145 வழங்கப்பட்டுள்ளது.

புதிய டெக்னோ பாப் 9 ஸ்மார்ட்போன் கிளெட்டரி வைட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்-டிரெய்ல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 6 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com