நான்கு மாடல்களின் விலையை சத்தமின்றி மாற்றிய சாம்சங் - புதிய விலை விவரங்கள்

சாம்சங் நிறுவனம் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரிசையில் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் விலையை மாற்றியுள்ளது.
Galaxy A27
Published on

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A17, கேலக்ஸி A27, கேலக்ஸி F17 மற்றும் கேலக்ஸி A07 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை சாம்சங் நிறுவனம் உயர்த்தியுள்ளது. சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கான லாப வரம்பு குறைந்து வருவதன் காரணமாகவே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் ஒப்போ மற்றும் விவோ உள்ளிட்ட பிற நிறுவனங்களும் தங்கள் சாதனங்களின் விலையை உயர்த்தின. அதோடு, சாம்சங் நிறுவனமும் கடந்த காலங்களில் பல சாதனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இப்போது இந்தச் சாதனங்களின் புதிய விலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

புதிய விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி A17-இன் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட் விலை ரூ. 19,499-இல் இருந்து ரூ. 29,999-ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 256ஜிபி வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ. 20,999-இல் இருந்து ரூ. 32,999-ஆகவும், ரூ. 23,999-இல் இருந்து ரூ. 38,499-ஆகவும் அதிகரித்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி A27-ன் வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2,000 அதிகரித்து ரூ. 33,999-ஆகியுள்ளது.

மேலும், 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 256ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட்களின் விலைகளும் முறையே ரூ. 34,999 மற்றும் ரூ. 40,499-இல் இருந்து ரூ. 38,999 மற்றும் ரூ. 45,499-ஆக மாறியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி A07 5ஜி-யை பொறுத்தவரை, 4ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம், 128ஜிபி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 என்ற அளவில் உயர்ந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com