

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது 'கேலக்ஸி F' சீரிசில் சில ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட சாம்சங் போன்களின் பட்டியலில் தற்போது கேலக்ஸி F17 5ஜி மற்றும் கேலக்ஸி F70e 5ஜி ஆகிய மாடல்களும் இணைந்துள்ளன. இந்த இரு மாடல்களின் விலை தலா 2,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி F17 5ஜி-யின் அனைத்து ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கேலக்ஸி F70e 5ஜி-யின் இரண்டு வகைகளின் விலையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி F17 5ஜி-யின் மூன்று மாடல்களும் தலா 2,000 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 23,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல், தற்போது 25,499 ரூபாயாக உயர்ந்துள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை 26,499 ரூபாயில் இருந்து 28,499 ரூபாயாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை 29,499 ரூபாயில் இருந்து 31,499 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கேலக்ஸி F17 5ஜி-யின் ஆரம்ப விலை 25,000 ரூபாயை தாண்டியுள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் 'F' சீரிசில் ஒரு விலையுயர்ந்த தேர்வாக மாறியுள்ளது.
டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி பகிர்ந்துள்ள விலை மாற்ற விவரங்களின்படி, கேலக்ஸி F70e 5ஜி-யின் விலையும் அதிகரித்துள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை 18,499 ரூபாயில் இருந்து 20,499 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை 21,499 ரூபாயில் இருந்து 23,499 ரூபாயாக, அதாவது 2,000 ரூபாய் அதிகரித்துள்ளது. மெமரி மற்றும் பிற உதிரிபாகங்களின் விலை உயர்ந்து வருவதே இந்த விலை மாற்றங்களுக்குக் காரணமாகும்.