10,000mAh பேட்டரியுடன் அறிமுகமான ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் - விலை, முழு விவரங்கள்

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மூன்று வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Redmi Note 17 Pro Max, Note 17 Pro
Published on

இந்தியாவில் ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 17 மாடலுடன் இணைந்து, நோட் 17 சீரிசின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடல்களாக ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ ஆகியவை அடங்கும்.

புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 10,000mAh பேட்டரியுடன் வருகிறது, அதே சமயம் நோட் 17 ப்ரோ 9,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6s சீரிஸ் SoC இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

நோட் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்:

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர்ஓ.எஸ். 3 உடன் வரும் ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனுக்கு நான்கு ஆண்டுகள் ஓ.எஸ். அப்டட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.83-இன்ச் 1.5K (1,280 x 2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ், குவால்காமின் 4nm ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12GB வரையிலான LPDDR5x ரேம், ஒரு அட்ரினோ GPU மற்றும் 256GB UFS 4.1 மெமரி இடம்பெற்றுள்ளன. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக இந்த ஸ்மார்ட்போன் IP66 + IP68 + IP69K சான்றுகளுடன் வருகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 50MP பிரைமரி கேமராவும், 8MP அல்ட்ராவைடு கேமராவும் அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸில் உள்ள அதே OS, மென்பொருள் ஆதரவு, டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறுகிறது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள அதே பின்புற கேமரா யூனிட்டையும் பெறுகிறது.

எனினும், இந்த மாடலில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ, 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 9,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 17 ப்ரோ, நோட் 17 ப்ரோ மேக்ஸ் விலை விவரங்கள்:

இந்தியாவில் ரெட்மி நோட் 17 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் ரூ. 36,999-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், டாப் எண்ட் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39,999 ஆகும்.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999-இல் இருந்து தொடங்குகிறது. இதன் டாப் எண்ட் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 55,999 ஆகும்.

இந்நிறுவனம், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி கார்டுகள் மூலம் ரூ. 5,000 வரை உடனடி தள்ளுபடி அல்லது எச்.டி.பி. ஃபைனான்சியல் சர்வீசஸ் மூலம் ரூ. 5,000 வரை கேஷ்பேக் வழங்குகிறது.

புதிய ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை முறையே செப்டம்பர் 17 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய தேதிகளில் அமேசான் தளத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ்: மட்சா கிரீன், சீக்ரெட் சன்ரைஸ் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய வண்ணங்களிலும், ரெட்மி நோட் 17 ப்ரோ: கிளவுட் ப்ளூ, பர்பிள் வைப் மற்றும் ஸ்டெல்த் பிளாக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com