8000mAh பேட்டரி, 80 வாட் சார்ஜிங்... புது ஸ்மார்ட்போன் டீசர் வெளியிட்ட ரியல்மி

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
Realme P4s
Published on

ரியல்மி நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி P4s என அழைக்கப்படுகிறது.

இந்த மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரியல்மி P4, P4 ப்ரோ, P4x, P4 பவர் மற்றும் P4 லைட் ஆகிய மாடல்களின் வரிசையில் இணைகிறது.

வெளியீடு மட்டுமின்றி புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி, 1.5K சாம்சங் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வரும் என்பதை உணர்த்தும் வகையில் டீசர்களை வெளியிட்டுள்ளது.

வெளியீட்டு அப்டேட்:

புதிய ரியல்மி P4s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இத்துடன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் வரை இந்த தளத்தில் அதன் டீசர்கள் மற்றும் அம்சங்கள் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.

தற்போதைய டீசர்களின் படி ரியல்மி P4s ஸ்மார்ட்போன் மெட்டாலிக் டர்கொய்ஸ் மற்றும் லைட் கோல்டு ஷேட் என இருவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி P4s ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி சிப்செட், ஹைப்பர் விஷன் பிளஸ் ஏ.ஐ. சிப், 8000mAh பேட்டரி, 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகிறது. இந்த ஸ்மாரட்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 3 நாட்கள் வரையிலான பேக்கப் வழங்கும் என்று தெரிகிறது.

இத்துடன் புதிய ரியல்மி P4s மாடலில் 1.5K டிஸ்ப்ளே (1272x2772 பிக்சல்), 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், HDR10+, நெட்ஃப்ளிக்ஸ் HDR சப்போர்ட், நியர்-லாஸ்லெஸ் 2K வீடியோ பிளேபேக் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் IP69, IP68 மற்றும் IP66 தர டஸ்ட் மற்றும் வாட்ட்ர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. மேலும், 50MP கேமரா, ஏஐ கேமிங் பார்ட்னர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com