அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி 16x 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
Realme 16x 5G
Published on

இந்திய சந்தையில் ரியல்மி 16x 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 6 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. இது 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.8-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, இதில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8 MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. ரியல்மி 16x 5ஜி ஆனது 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 7,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் ரிவர்ஸ் சாரஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் சலுகை விவரங்கள்:

இந்தியாவில் ரியல்மி 16x 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் (4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி) ரூ. 25,999 என்ற விலையில் தொடங்குகிறது. இதன் 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் என்ட்யூரன்ஸ் பிரவுன் (Endurance Brown) மற்றும் க்ளோரி வைட் (Glory White) ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

அறிமுக சலுகையாக ரூ. 2,000 தள்ளுபடியை பெறலாம். இதனால், இந்த மூன்று வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ. 23,999, ரூ. 25,999 மற்றும் ரூ. 28,999 ஆக குறைகிறது. மாற்றாக, வாங்குபவர்கள் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,000 தள்ளுபடி அல்லது ரூ. 3,000 வரையிலான எக்சேஞ்ச் சலுகையை பெறலாம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com