

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X8 பவர் 5ஜி மாடலுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரு மாடல்களும் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வெளியீட்டை ஒட்டி போக்கோ நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டதோடு, ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இது 67 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்மார்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், பிபிஎஸ் ப்ரோடோகால் சப்போர்ட் போன்ற அம்சங்கள் மற்றும் 6 ஆண்டுகள் வரை பேட்டரி ஆரோக்கியம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது போக்கோ ஸ்மார்ட்போன் 1.5K 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ X8 மற்றும் போக்கோ X8 பவர் 5ஜி என இரு மாடல்களும் ஒரே மாதிரியான ஸ்கிரீன், டிசைன் மற்றும் பில்டு கொண்டிருக்கும். இத்துடன் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உடன் வரும் என்று உறுதியாகி இருக்கிறது.