6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரு கேமராக்களிலும் அதிகபட்சம் 2K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
Lava Virat V1 Pro 5G
Published on

லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் விராட் V1 5ஜி மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் மேம்பட்ட கேமரா, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்ட யுனிசாக் பிராசஸர், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்:

லாவா விராட் V1 ப்ரோ 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T8200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 128 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரேம் பூஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய லாவா விராட் V1 மாடலில் 13MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இரு கேமராக்களிலும் அதிகபட்சம் 2K ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இத்துடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 17 அப்டேட், இரு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஹைப்ரிட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டிருக்கிறது.

விலை விவரங்கள்:

புதிய லாவா விராட் V1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சிக்கிம் மிட்நைட் மற்றும் ஸ்பிட்டி ஃப்ராஸ்ட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com