ரூ. 12,000 பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன்: இந்திய சந்தையில் ரீ-எனட்ரி கொடுத்த கார்பன்

கார்பன் நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ. 1000 தள்ளுபடி வழங்குகிறது.
Karbonn Rebel Series
Published on: 

கார்பன் நிறுவனம் 'கார்பன் ரெபெல்' மற்றும் 'ரெபெல் ப்ரோ' ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியுள்ளது.

இவை இரண்டுமே ரூ. 15,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இதில் மீடியாடெக் சிப்செட்கள், 7,000mAh வரையிலான பேட்டரி மற்றும் 50MP கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 'ரெபெல் 5ஜி' ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்துவதாக கார்பன் நிறுவனம் அறிவித்துள்ளது, ஆனால் இது பிற்காலத்தில் சந்தைக்கு வரும்.

இந்த புதிய 'ரெபெல்' சீரிசின் மூலம், இந்தியாவில் ரூ. 15,000-க்குள் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு கார்பன் நிறுவனம் ஒரு புதிய தேர்வை வழங்கியுள்ளது.

கார்பன் ரெபெல், ரெபெல் ப்ரோ - சிறப்பம்சங்கள்:

'கார்பன் ரெபெல்' மாடலில் 6.75 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 650 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 'ரெபெல் ப்ரோ' மாடலிலும் இதே அளவிலான டிஸ்ப்ளே உள்ளது, ஆனால் இது 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 720 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்குகிறது.

இந்த இரண்டு போன்களும் மீடியாடெக் ஹீலியோ G81 சிப்செட் மூலம் இயங்குகின்றன; இது ஒரு என்ட்ரி-லெவல் 4G சிப்செட் ஆகும். மேலும், இந்த போன்களில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு ஸ்லாட் வசதி உள்ளதால், இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும்.

கார்பன் ரெபெல் மாடலில் ஆட்டோஃபோக்கஸ் வசதியுடன் கூடிய 50MP பிரைமரி கேமரா உள்ளது, ஆனால் அதன் முன்புற கேமரா குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. கார்பன் ரெபெல் ப்ரோ மாடலில் 64MP பின்புற கேமராவும், 16MP முன்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விலைப்பிரிவில் உள்ள பட்ஜெட் போன்களில் எதிர்பார்க்கக்கூடிய அடிப்படை அம்சங்களே இவை. மென்பொருளை பொறுத்தவரை, இந்த கார்பன் ஸ்மார்ட்போன்கள் தேவையற்ற செயலிகள் இல்லாத யு.ஐ. உடன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். கொண்டுள்ளன. இரண்டு போன்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கான OS அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கார்பன் ரெபெல் மாடலில் 7000mAh பேட்டரி உள்ளது. ரெபெல் ப்ரோ மாடலில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் முறையே 20W மற்றும் 18W சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளன. இரு மாடல்களிலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.

இந்திய விலை:

கார்பன் ரெபெல் ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 12,499

கார்பன் ரெபெல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 11,999

X