7,050mAh பேட்டரி, 50MP கேமராவுடன் ஐகூ Z11 இந்தியாவில் அறிமுகம்

புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் நான்குவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
iQOO Z11
Published on

ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது Z11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஐகூ Z11x மற்றும் ஐகூ Z11 லைட் மாடல்களைத் தொடர்ந்து அறிமுகமான மூன்றாவது Z சீரிஸ் மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

புதிய Z11 மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 டர்போ சிப்செட், கர்வ்டு டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் மாற்றப்பட்டு Horizontal கேமரா பம்ப் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செலஸ்டியல் புளூ மற்றும் அரோரா கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

ஐகூ Z11 அம்சங்கள்:

புதிய ஐகூ Z11 மாடலில் 6.83 இன்ச் 1.5K 2800x1260 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2000-நிட் பிரைட்னஸ் மோட், HDR10+, அமேசான் பிரைம் வீடியோ HDR மற்றும் நெட்ப்ளிக்ஸ் HDR சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7500 டர்போ சிப்செட், LPDDR4X ரேம், UFS 3.1 ஸ்டோரேஜ்-உடன் வருகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி மற்றும் முன்புற கேமராக்களில் 4K வீடியோ வசதி உள்ளது.

இத்துடன் IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 கொண்டிருக்கிறது.

புதிய ஐகூ Z11 ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் இருப்பதை குறைக்க 3800 mm2 vapour chamber வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் ஐகூ Z11 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com