

ஐகூ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதன்படி ஐகூ 15, ஐகூ 15R மற்றும் ஐகூ நியோ 10 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் பல்வேறு வேரியண்ட்கள் விலை மாறியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் சமீப காலங்களில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது மொபைல்களின் விலையை உயர்த்தி வருகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான டிம் குக் தங்களது நிறுவன சாதனங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருந்தார்.
புதிய விலை விவரங்கள்:
ஐகூ 15 (12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 74,999-இல் இருந்து ரூ. 76,999 என மாறியுள்ளது
ஐகூ 15 (16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 81,999-இல் இருந்து ரூ. 83,999 என மாறியுள்ளது
ஐகூ 15R (8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 47,999-இல் இருந்து ரூ. 49,999 என மாறியுள்ளது
ஐகூ 15R (12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 52,999-இல் இருந்து ரூ. 54,999 என மாறியுள்ளது
ஐகூ 15R (12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 59,999-இல் இருந்து ரூ. 61,999 என மாறியுள்ளது
ஐகூ நியோ 10 (8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 39,999-இல் இருந்து ரூ. 41,999 என மாறியுள்ளது
ஐகூ நியோ 10 (12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 44,999-இல் இருந்து ரூ. 46,999 என மாறியுள்ளது
தற்போது விலை உயர்த்தப்பட்ட மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.