13300mAh பேட்டரி ஸ்மார்ட்போனை உருவாக்கும் ஹானர்

ஹானர் நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட பேட்டரி விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
Honor Phone
Published on: 

ஹானர் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட புதிய, அதிக திறன் கொண்ட பேட்டரி, சீனாவின் 3சி சான்றிதழை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. 13,300mAh திறன் கொண்ட இந்த பேட்டரி, நடுத்தர விலை பிரிவில் வரவிருக்கும் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றிற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சீன தர சான்றிதழ் மையத்தின் பொது தரவுகளின்படி, இந்த பேட்டரி HB6674118ELW-C என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இது நவம்பர் 6, 2026 அன்று, GB 31241-2022 என்ற தேசிய தரநிலையின் கீழ் சான்றளிக்கப்பட்டது.

தொழில்நுட்ப துறை வலைப்பதிவாளர்களின் தகவல்படி, 13,300mAh திறன் கொண்ட இந்த பேட்டரி, 7 இன்ச் திரை கொண்ட சாதனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. @WHYLAB-இன் கருத்துப்படி, இந்த பேட்டரி ஹானர் பவர் 3 அல்லது X90 ப்ரோ மேக்ஸ் போன்ற பெரிய ஸ்கிரீன் கொண்ட மாடல்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

மேலும், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 7 இன்ச் ஸ்கிரீன் கொண்ட நடுத்தர விலை ஸ்மார்ட்போன்களுக்காக, இந்த 13,300mAh பேட்டரியை ஹானர் நிறுவனம் சோதனை உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிடுகிறது.

மேலும், இந்த மாடல் 2027-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் நோக்கில், இன்னும் அதிக திறன் கொண்ட பேட்டரி தீர்வுகளை ஹானர் நிறுவனம் தீவிரமாக உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹானர் நிறுவனம் ஏற்கனவே 10,000mAh அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட பேட்டரி கொண்ட பல ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், அந்நிறுவனத்தின் சிலிக்கான்-கார்பன் தொழில்நுட்பமான "Qinghai Lake" பேட்டரி தொழில்நுட்பத்தின் பல்வேறு மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

X