ரூ. 3999 விலையில் விற்பனையாகும் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2

சியோமி நிறுவனத்தின் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2
எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2
Published on

சியோமி நிறுவனம் தனது எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடல் இந்தியாவில் மே மாதத்தில் ரூ. 4499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த இயர்போன் தற்சமயம் ரூ. 3999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த இயர்போனுடன் கானா பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 வாங்குவோருக்கு ரூ. 199 மதிப்புள்ள கூப்பன் கோட் வழங்கப்படுகிறது. இதனை பயனர்கள் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி இலவசமாக கானா பிளஸ் சந்தாவை பெற முடியும். இந்த சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

மாற்றப்பட்ட புதிய விலை அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com