ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஏ.ஐ. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 3999 விலையில் அறிமுகம்

ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 3,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஐடெல் ஏ25
ஐடெல் ஏ25
Published on

டிரான்சிஷன் நிறுவனத்தின் ஐடெல் பிராண்டு இந்தியாவில் ஏ25 பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனாக வெளியாகி இருக்கும் ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஐ.பி.எஸ். ஹெச்.டி. 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராஸர், 1 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க ஏ25 ஸ்மார்ட்போனில் 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம், 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, உருது, நேபாளம், அசாமீஸ் மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ25 சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே

- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்

- 1 ஜி.பி. ரேம்

- 16 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)

- டூயல் சிம் ஸ்லாட்

- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

- 2 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- மைக்ரோ யு.எஸ்.பி. 

- 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பர்பபிள், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் சீ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com