ரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் XR மாடல் ரூ.17,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXR
ரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்
Published on

இந்தியாவில் புதிய ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனையாளர்கள் புதிய ஐபோன் XR பேஸ் வேரியண்ட் மாடலை ரூ.59,900 விலையில் விற்பனை செய்கின்றனர். இந்தியாவில் முன்னதாக ஐபோன் XR ரூ.76,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

புதிய அறிவிப்பின் படி குறுகிய காலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு 10 சதவிகிதம் கூடுதல் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் கேஷ்பேக் தொகையை சேர்க்கும் போது ரூ.53,900 விலையில் ஐபோன் XR வாங்கலாம்.

என்ட்ரி-லெவல் ஐபோன் XR 64 ஜி.பி. வேரியண்ட் மட்டுமின்றி 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மாடல்களின் விலையும் குறைக்கப்படுகிறது. இதனால் ஐபோன் XR 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.58,400, 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.67,400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இச்சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் மற்ற வங்கி சேவையை பயன்படுத்துவோர் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. ஐபோன் XR வாங்க முறையே ரூ.64,900 மற்றும் ரூ.74,900 செலுத்த வேண்டும். முன்னதாக இவற்றின் விலை முறையே ரூ.81,900 என்றும் ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு முழு தொகையை செலுத்தும் போதும், 12 அல்லது 24 மாதங்களுக்கு தவணை முறையை தேர்வு செய்வோருக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. புதிய விலை குறைப்பின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் வைத்திருப்போரும் புதிய ஐபோன் வாங்க முற்படுவர் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com