ரீல்ஸ் அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்
Published on

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ரீல்ஸ் அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின் இந்தியாவிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. 

அந்த வகையில் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில பயனர்கள் ரீல்ஸ் அம்சம் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்து இருக்கின்றனர். 

எனினும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய தகவல்களின் படி புது அப்டேட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. டிக்டாக் போன்றே ரீல்ஸ் அம்சத்திலும் வீடியோக்களை எடிட் செய்து பதிவேற்றம் செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com