33 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா புதிய சலுகை

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் புதிய சலுகை ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படுகிறது. #Idea #offer
33 ஜி.பி. டேட்டா வழங்கும் ஐடியா புதிய சலுகை
Published on

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள ஐடியா செல்லுலார் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.149 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஐடியா செல்லுலார் ரூ.149 புதிய சலுகையில் மொத்தம் 33 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் வேலிடிட்டி காலத்தில் பயனர்கள் 100 வெவ்வேறு எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ஐடியா தற்சமயம் அறிவித்திருக்கும் ரூ.149 சலுகை இதே விலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளன. ஜியோ வழங்கும் ரூ.149 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ பயனர்கள் இந்த சலுகையை 42 நாட்களுக்கு பெற முடியும்.

ஏர்டெல் வழங்கும் சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஐடியா தற்சமயம் அறிவித்து இருக்கும் புதிய சலுகை முதற்கட்டமாக கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

முன்னதாக வோடபோன் சார்பில் ஆறு புதிய காம்போ ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட புதிய சலுகைகளில் டாக்டைம், டேட்டா மற்றும் ரேட் கட் பலன்கள் 28 நாட்கள் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com