

‘நோக்கியா’வைப் போல நாளடைவில் ஹெச்டிசியும் பின்வாங்கிக் கொண்டது. இப்படி ஒரு நிறுவனம் இருந்ததா? என்று வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுக்குத்தான் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ‘ஹெச்டிசி’.
6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, 720x1520 பிக்ஸலில் ரெசல்யூசன், 13 எம்பியில் பிரைமரி சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா, 5 எம்பியில் டெரிட்டரி, டெப்த்-சென்சிங் சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், அத்துடன் 16 எம்பியில் செல்ஃபி கேமரா, ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம், ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, மீடியா டெக் ஹெலியோ பி35 பிராசஸர் என அசத்துகிறது இந்த போன். இந்தியாவில் இதன் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.