

பார்சிலோனா:
அசுஸ் நிறுவனத்தின் சென்ஃபோன் 5 மற்றும் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 19:9 சூப்பர் IPS டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த ZenUI 5.0 கொண்டு இயங்குகிறது. 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 00.3s டூயல்-பிக்சல் PDAF மற்றும் செயற்கை நுண்ணறிவு சீன் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
அசுஸ் சென்ஃபோன் 5 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் சூப்பர் IPS டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சா்ந்த ZenUI 5.0, ஆண்ட்ராய்டு பி அப்கிரேடு
- ஹைப்ரிட் டூயல் சிம் மற்றும் டூயல் வோல்ட்இ
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
- சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8
- 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.0, OV8856 சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, OV8856 சென்சார்
- கைரேகை சென்சார்
- டூயல் ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அசுஸ் பூஸ்ட்மாஸ்டர் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய அசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் வெளியிடப்பட இருக்கும் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போனின் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
அசுஸ் சென்ஃபோன் 5 லைட் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்
- அட்ரினோ 508 GPU
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 ஓரியோ சா்ந்த ZenUI 4.0, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த Zen UI 5.0
- டூயல் சிம்
- 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- சோனி IMX376 சென்சார், f/2.2
- 20 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய அசுஸ் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரோக் ரெட் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் முதல் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.