ஆப்பிள் வாட்ச்ஒ.எஸ்.7 மற்றும் வாட்ச் சீரிஸ் 6 புதிய அம்சங்கள்

கிட்ஸ் மோட், ஸ்லீப் டிராக்கிங் என பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒ.எஸ்.  7 மற்றும் வாட்ச் சீரிஸ் 6 மாடல் இந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக ஐ.ஒ.எஸ். 14 இயங்குதள குறியீடுகள் இணையத்தில் லீக் ஆகியிருந்தன. அவற்றில் ஸ்லீப் டிராக்கிங், டேக்கிமீட்டர், வாட்ச் ஃபேசை பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல்களில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வாட்ச் ஃபேஸ்களை பொருத்தவரை ஆப்பிள் இரண்டு அப்டேட்களை வழங்க இருக்கிறது. இதில் முதல் அம்சம் பயனர் தங்களின் ஐபோன் வாட்ச் ஆப் கொண்டு வாட்ச் ஃபேஸ்களை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது. இவற்றை ஃபைல்ஸ் செயலியில் பதிவு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மற்றொரு அம்சம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளை வாட்ச் ஃபேஸ் ஆக பதிவு செய்ய அனுமதிக்கிறது. 

வாட்ச் ஒ.எஸ்.7 தளத்தில் பயனர்கள் ஒரே ஐபோன் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆப்பிள் வாட்ச்களை குழந்தைகள் பயன்படுத்தும் போது பிரத்யேக அம்சங்களை இயக்க அனுமதி வழங்க முடியும். இதனால் குழந்தைகள் பயன்படுத்தும் ஆப்பிள் வாட்ச்சினை மற்றொரு ஐபோன் மூலம் இயக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

இத்துடன் ஸ்லீப் டிராக்கிங் மற்றும் இன்ஃபோகிராஃப் ப்ரோ என இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் ஸ்லீப் ஆப் கொண்டு பயனர் உறங்கும் முறைகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இன்ஃபோகிராஃப் ப்ரோ அம்சத்தில் டேக்கிமீட்டர் விவரங்கள் வாட்ச் ஃபேசில் இடம்பெற்று இருக்கும். 

X

Maalai Malar
www.maalaimalar.com