இந்தியாவில் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR முன்பதிவு துவங்கியது

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax
இந்தியாவில் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR முன்பதிவு துவங்கியது
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. புதிய ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் சில நிறங்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் ஏற்கனவே கிடைக்கிறது. 

பிளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.13,500 வரை தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் போன்றே ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்திலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கிறது. ஏர்டெல் ஸ்டோரில் இருந்து ஐபோனினை வெளியீட்டு தினத்தன்றே பெறும் வசதியும், செப்டம்பர் 28-ம் தேதி மாலை 6.00 மணி முதல் டோர் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று ஜியோவின் ஆன்லைன் ஸ்டோரிலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ஐபோன் வெளியீட்டுக்கு பின் மூன்று முதல் ஐந்து நாட்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் புதிய ஐபோன் மாடல்களை 12 மற்றும் 24 மாதங்களில் ஒரு மாத தவணை முறை வசிதயில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை செல்லுபடி ஆகும்.

புதிய ஐபோன் மாடல்களின் விலை விவரம்:

ஆப்பிள் ஐபோன் XS 64ஜிபி – ரூ.99,900

ஆப்பிள் ஐபோன் XS 256ஜிபி – ரூ.1,14,900

ஆப்பிள் ஐபோன் XS 512ஜிபி – ரூ.1,34,900

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 64ஜிபி – ரூ.1,09,900

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 256ஜிபி – ரூ.1,24,900

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 512ஜிபி – ரூ. 1,44,900

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com