இணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 ப்ரோ ரேம் விவரங்கள்?

ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் ரேம் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐபோன் 11 ப்ரோ
ஐபோன் 11 ப்ரோ
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன்கள் வெளியாகி சில மாதங்கள் நிறைவுற்று இருக்கும் நிலையில், 2020 ஐபோன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன.

புதிய விவரங்களின் படி 2020 ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலிலும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலில் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம்.

இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பின்புறம் 3D சென்சிங் வசதி மற்றும் அதிவேக 5ஜி செயல்திறன் வழங்கும் எம்.எம். வேவ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக குவால்காம் வெளியிட்ட தகவல்களிலும் 2020 ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

ஃபிளாக்‌ஷிப் மாடல்களை தவிர ஆப்பிள் நிறுவனம் சற்றே குறைந்த விலையில், ஐபோன் எஸ்.இ. 2 மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com