ஐபேட்களுக்கென பிரத்யேக இயங்குதளம் அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐபேட்களுக்கென பிரத்யேக இயங்குதளம் அறிவித்த ஆப்பிள்
Published on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தில் புதிய ஹோம் ஸ்கிரீன், மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்கள், மேம்பட்ட ஃபைல்ஸ் ஆப், சிறப்பான டெக்ஸ்ட் எடிட்டிங் அனுபவம் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது.

சஃபாரியில் டெஸ்க்டாப் தர பிரவுசரிங் அனுபவம் ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கிறது. இவற்றுடன் டார்க் மோட், கஸ்டம் ஃபாண்ட்கள், ஃபுளோட்டிங் கீபோர்டு, ஸ்வைப் சார்ந்த டைப்பிங் உள்ளிட்டவையும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஐபேட் ஒ.எஸ். இன் ஹோம் ஸ்கிரீனில் விட்ஜெட்களை சேர்க்கும் வசதியுடன் அவற்றில் இருந்து விவரங்களை பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்களுடன் டெக்ஸ்ட் எடிட்டிங் ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய இயங்குதளத்தை பயன்படுத்தும் போது ஐபேடில் செயலிகளிடையே மாற இனி ஸ்லைடு ஓவர் செய்தாலே போதுமானது. 

ஆப்பிள் பென்சில் மூலம் திரையின் மேல்புறம் ஸ்வைப் செய்தால் இணைய பக்கங்கள், தரவுகள் மற்றும் மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். புதிய ஐபேட் ஒ.எஸ். ஆப்பிள் பென்சில் சாதனத்திற்கு பல்வேறு புதிய வசதிகளை வழங்குகிறது.

ஐபேட் ஒ.எஸ். இயங்குதளத்தில் டார்க் மோட், கஸ்டம் ஃபாண்ட் சப்போர்ட், புதிய வடிவமைப்பில் போட்டோஸ் ஆப், மேம்பட்ட ஆப்பிள் மேப்ஸ், வேகமான ஃபேஸ் ஐ.டி. மற்றும் சிறிதளவு அப்டேட் பேக்கேஜ்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் ஒ.எஸ்.  இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

புதிய ஐபேட் ஒ.எஸ். ஐபேட் ஏர் 2 மற்றும் புதிய ஐபேட், ஐபேட் ப்ரோ மாடல்களில் இயங்கும். இத்துடன் ஐபேட் மினி 4 மற்றும் ஐபேட் 5 உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐபேட் ஒ.எஸ். வழங்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com