இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு முதல் பதக்கம்

100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல்முறை பதக்கம் கிடைத்துள்ளது.
Shouriya ambure
Published on: 

இளையோர் ஒலிம்பிக் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷவுர்யா அவினாஷ் அம்புரே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

செனகல் நாட்டின் தலைநகரான டகாரில் 4-வது இளையோர் ஒலிம்பிக் (யூத் ஒலிம்பிக்) போட்டிகள் கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது.

இளையோர் ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் ஷவுர்யா அவினாஷ் அம்புரே கலந்துகொண்டார்.

வெண்கலப் பதக்கம்

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 13.59 விநாடிகளில் இலக்கை எட்டி ஷவுர்யா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இளையோர் ஒலிம்பிக்கில் தடை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷவுர்யா. ஏனென்றால், இளையோர் ஒலிம்பிக் கலப்பு போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

அமைச்சர் வாழ்த்து

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஷவுர்யாவிற்கு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

X