கார்ல்சன் காலைத் தொட்டு கும்பிட்ட இளம் செஸ் வீராங்கனை.. ஜாம்பவான் கொடுத்த செம ரியாக்ஷன் - வீடியோ

7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் வெற்றி பெற்றார்காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கார்ல்சன் காலைத் தொட்டு கும்பிட்ட இளம் செஸ் வீராங்கனை.. ஜாம்பவான் கொடுத்த செம ரியாக்ஷன் - வீடியோ
Published on

டாடா ஸ்டீல் செஸ் இந்தியா திருவிழா 2024 நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் இளம் வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி வெற்றி பெற்றார்.

உலகின் நம்பர் 1 செஸ் ஜாம்பவான் நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சன், பிரிஸ்டி முகர்ஜியிடம் டிராபியை கொடுக்கும் சமயத்தில் பிரிஸ்டி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பிரஸ்டியின் செயலை கவனித்த கார்ல்சன் முகத்திலும் புன்னகை அரும்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாடா ஸ்டீல் செஸ் இந்தியா நிகழ்வானது மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தன்யோ ஆடிட்டோரியத்தில் வைத்து நவம்பர் 13 தொடங்கி நேற்று நவம்பர் 17 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com