மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இன்று இரவு இறுதிப்போட்டி!

சுவிட்டோலினா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
WTA
Published on: 

உலகின் ‘டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

சுவிட்டோலினா வெற்றி

நேற்று நடைபெற்ற ஒரு அரை இறுதியில் தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா சுவிட்டோலினா (உக்ரைன்)- எட்டாம் நிலை வீராங்கனையான லிண்டா நோஸ் கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

இதில், சுவிட்டோலினா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 ஒருமணி 5 நிமிடம் நேரமே தேவைப்பட்டது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஆண்ட்ரீவா (ரஷியா)- ஐந்தாம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா ( அமெரிக்கா) மோதினார்கள்.

ஆண்ட்ரீவா

இதில் ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில பெகுலாவை வீழ்த்தினார். இந்த போட்டி 1 ஒருமணி 25 நிமிட நேரம் நடைபெற்றது.

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆண்ட்ரீவா- சுவிட்டோலினா மோதுகிறார்கள்.

X