பிரக்ஞானந்தாவிடம் முண்டியடித்து ஆட்டோகிராப் வாங்கிய வெளிநாட்டினர்- வைரலாகும் வீடியோ

உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.உலகக் கோப்பையில் வென்றதன் மூலம் கார்ல்சென் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரக்ஞானந்தாவிடம் முண்டியடித்து ஆட்டோகிராப் வாங்கிய வெளிநாட்டினர்- வைரலாகும் வீடியோ
Published on

பாகு:

பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலிலும் இறுதிப்போட்டியின் 2-வது சுற்று 30-வது நகர்த்தலிலும் டிரா ஆனது. இதனையடுத்து இருவருக்கும் டைபிரேக்கர் சுற்று நேற்று நடந்தது. இதன் முதல் சுற்றில் கார்ல்சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடந்த 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது.

இதனால் கார்சென் உலகக் கோப்பையை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார்.

இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். முதன்முறை 2016-ல் தோற்கடித்த பொழுது 10 வயது வீரராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, 2018-ல் நடைபெற்ற விரைவான செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார். கடந்த 2022-லும், பிரக்ஞானந்தா மூன்றாவது முறையாக கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

இந்த சிறு வயதில் அனைவரும் வியக்கும் வகையில் சாதனை படைத்து வரும் 18 வயது பிரக்ஞானந்தாவிடம் வெளிநாட்டினர் முண்டியடித்து கொண்டு ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com