உலக பேட்மிண்டன் தரவரிசை: 7-வது இடம் பிடித்த எச்.எஸ்.பிரனாய்.. பிவி சிந்து முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.
உலக பேட்மிண்டன் தரவரிசை: 7-வது இடம் பிடித்த எச்.எஸ்.பிரனாய்.. பிவி சிந்து முன்னேற்றம்
Published on

உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com