உலக பேட்மிண்டன் போட்டி: எம்ஆர் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி காலிறுதிக்கு தகுதி

சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது. மற்றொரு பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.
உலக பேட்மிண்டன் போட்டி: எம்ஆர் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி காலிறுதிக்கு தகுதி
Published on

டோக்கியோ:

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சிங்கப்பூரின் கேஎச் லோ மற்றும் எச் டெர்ரி ஜோடியை எதிர்த்து களம் கண்ட இந்திய ஜோடி,முதல் செட்டை இழந்தது. எனினும், அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி 18-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை டென்மார்க் அணியினரை எதிர்கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com