ரூ.32 கோடி பரிசுத் தொகை: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் இன்று ஆரம்பம்!

பட்டத்தை கைப்பற்றுவதில் எலினா ரைபகினா, அரினா சபலென்கா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.32 கோடி பரிசுத் தொகை: டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் இன்று ஆரம்பம்!
Published on: 

'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்கா வில் இன்று தொடங்குகிறது.

பெண்கள் டென்னிஸ்

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் 55-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டி யன்வெல்ஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி குரூப் 1-ல் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கோகோ காப் (அமெரிக்கா), 5-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), விம்பிள்டன் சாம்பியனும், 8-வது இடத்தில் உள்ளவருமான லிண்டா நோஸ் கோவா (செக்குடியரசு) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அரினா சபலென்கா

குரூப் 2-ல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்), பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், 3-வது இடத்தில் உள்ளவருமான மிரா ஆன்ட்ரீவா (ரஷியா), 6-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), 7-வது இடத்தில் உள்ள கரோலினா முச்சோவா (செக்குடியரசு) ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இதில் ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

இந்த ஆண்டில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்த அரினா சபலென்கா அதற்கு பரிகாரமாக இந்த பட்டத்தை வெல்வதில் தீவிரமாக இருக்கிறார். பட்டத்தை கைப்பற்றுவதில் எலினா ரைபகினா, அரினா சபலென்கா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பெண்கள் இரட்டையரிலும் போட்டி நடைபெறுகிறது.

இதில் கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு)-டெய்லர் டவுன்சென்ட் (அமெரிக்கா), கேப்ரில்லா டாப்ரோரோஸ்கி (கனடா)-லூசா ஸ்டெபானி (பிரேசில்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்)-ஜாங் ஷூவாய் (சீனா), சாரா எர்ரானி-ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) உள்ளிட்ட முன்னணி 8 ஜோடிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

ரூ.94 கோடி பரிசுத்தொகை

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.94 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக ரூ.2 கோடியும், ஒவ்வொரு லீக் வெற்றிக் கும் ரூ.2% கோடியும் கிடைக்கும்.

அது தவிர அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி வெற்றிக்கும் பரிசுத்தொகை உண்டு. ஒரு வீராங்கனை தோல்வியை சந்திக்காமல் பட்டத்தை வென்றால் ஏறக் குறைய ரூ.32 கோடியை பரிசாக அள்ளுவார்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் எலினா ரைபகினா-லிண்டா நோஸ்கோவா, கோகோ காப்-ஜெசிகா பெகுலா ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

X