பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டெல்லி-பெங்களூரு இன்று மோதல்

இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் இரண்டு அணிகள் மோதுகின்றன.பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டெல்லி-பெங்களூரு இன்று மோதல்
Published on

மும்பை:

முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூரு அணி தான் மோதிய நான்கு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நிலையில் பெங்களூரு அணி உள்ளது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com