ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு..!- ஹர்மன்பிரீத் சிங்

உலகக் கோப்பை போட்டியில் 1975-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பதக்க மேடையை எட்டவில்லை
harmanpreet singh
Published on

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடந்த உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி லீக் சுற்றில் வேல்ஸ், பாகிஸ்தானை தோற்கடித்தது.

இங்கிலாந்திடம் வீழ்ந்தது. 2-வது சுற்றில் நெதர்லாந்து, அர்ஜென்டினாவிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

பின்னர் நடந்த 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் பணிந்து 8-வது இடம் பெற்றது.

உலகக் கோப்பை போட்டியில் 1975-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பதக்க மேடையை எட்டவில்லை என்ற சோகம் தொடருகிறது.

ஹர்மன்பிரீத் சிங்

அடுத்து இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை ஜப்பானின் அய்ச்சி, நகோயாவில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறது.

12 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை (செப்.20-ந் தேதி) எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பையில் கடைசி ஆட்டத்தில் தோற்ற பிறகு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறியதாவது:-

இரு அணிகளும் (இந்தியா, பெல்ஜியம்) இந்த இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட விரும்பவில்லை.

அத்துடன் இரு அணிகளும் ஒரே மனநிலையில் தான் இருந்தன. உலகின் தலைசிறந்த அணிக்கு எதிராக அவர்களது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஆடி, ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டது மிகுந்த ஊக்கம் அளிக்கிறது.

ஆட்டத்தின் 60 நிமிடமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அதனை இந்த ஆட்டத்தில் நாங்கள் பார்த்தோம். பெல்ஜியம் அணிக்கு எதிராக செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் 8-வது இடத்தை பிடித்ததில் மகிழ்ச்சி இல்லை. ஆனால் இது ஒரு பயணம். தற்போது எங்களது அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு போட்டியாகும்.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற விரும்புகிறோம்.

இந்த தொடரில் நாங்கள் தடுப்பாட்டத்தில் நல்ல பாடம் கற்றுக்கொண்டோம். ஒரு அணியாக தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் பெரிய அணிகள் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

நாம் தடுப்பாட்டத்தில் இன்னும் வலுவாக இருக்க வேண் டியது அவசியமானதாகும். இந்த ஒரு விஷயத்தில் தான் நாம் பின்தங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com