வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்- இந்திய கலப்பு ஜோடி காலிறுதிக்கு தகுதி

இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். மற்ற இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர்.
சிக்கி ரெட்டி
சிக்கி ரெட்டி
Published on

வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com