ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை

தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்துள்ளார்.
vidya ramraj
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

வித்யா ராம்ராஜ் தேசிய அளவில் தடை தாண்டும் ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 42 ஆண்டுகால 55.42 விநாடிகளில் படைத்திருந்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்துள்ளார்.

இந்தியா இதுவரை 4 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com