புரோ கபடி லீக்: உ.பி, மும்பை அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் யு மும்பா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: உ.பி, மும்பை அணிகள் வெற்றி
Published on

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினர்.

இறுதியில், யு மும்பா அணி 40-34 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இது யு மும்பா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் யு மும்பா அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணி வீழ்த்தி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com