

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா மற்றும் தன்வி ஷர்மா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக வீராங்கனையான அன்மோல் கார்ப் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-19, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-19, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய வீராங்கனை பிரதிவியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு வீராங்கனையான இந்தியாவின் தஸ்னிம் மிர் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.