

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.
இந்தத் தொடரில் இருந்து இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தென் கொரியாவின் கிம் கா-உன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய வீராங்கனை 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி 37 நிமிடங்களில் முடிந்தது.