

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-14, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 2-16, 21-15 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை அஷ்மிதா சலிஹாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் உன்னதி ஹூடா, அன்மோல் கார்பை எதிர்கொள்கிறார்.