ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Published on

கட்டாக்:

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னீம் மிர் உடன் மோதினர்.

முதல் செட்டை 18-21 என இழந்தார் உன்னதி ஹூடா. இதனால் சுதாரித்துக் கொண்ட் அவர் அடுத்த இரு செட்களை 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

இறுதிப்போட்டியில் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஈஷாராணி பரூவா உடன் மோதுகிறார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com