

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் துஷார் சுவீர் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் துஷார் சுவீர், இந்தோனேசியாவின் ஷுஜிவோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீரர் 19-21, 21-19, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் துஷார் சுவீர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.