ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெறும் கண் கண்ணாடியுடன் 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்றார். இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் துருக்கி துப்பாக்கிச் சுடுதல் வீரர் யூசுப் டிகெக்!
Published on

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்தது. இணையத்தில் யூசுப்பின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், துருக்கி வீரர் யூசுப் டிகெக், இஸ்தான்புல்லில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் அணியும் எந்த வித உபகரணங்களும் அணியாமல் அசால்டாக குறி பார்த்து சுட்டு உலகம் முழுக்க வைரலான யூசுப், இந்தப் போட்டியிலும் அதே போல் பங்கேற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com