டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் ஏமாற்றம் அளித்த திரிசா-காயத்ரி ஜோடி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது.
treesa jolly, gayatri gopichand
Published on: 
Summary

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, மலேசியாவின் பியர்லி டேன் - தின்னா முரளிதரன் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-14 என முதல் செட்டை கைப்பற்றியது.

இதில் சுதாரித்துக் கொண்ட மலேசிய ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-17, 21-11 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் இந்தியாவின் திரிசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, இரட்டையரில் சாதவிக் - சிராக் ஜோடி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com