இது மிக அரிதான வாய்ப்பு: ஆசிய விளையாட்டு குறித்து லிட்டன் தாஸ்

ஒவ்வொரு வீரரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்றார்.
litton das
Published on
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச டி20 அணி கேப்டனான லிட்டன் தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களது தயாரிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

எங்களது கடைசி டி20 சர்வதேச தொடர் ஜிம்பாப்வேயில் நடந்தது. தற்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டங்கள், அணியாக வீரர்களிடையே நல்ல புரிதலையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்க உதவியுள்ளது.

நிச்சயமாக அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு வீரராக நானும் ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் போட்டிக்குச் செல்வேன். இந்தப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதில்லை.

வீரர்களுக்கு வழக்கமாக பிரான்சைஸ் லீக் போட்டிகள் மற்றும் தேசிய அணிக்கான தொடர்கள் கிடைக்கின்றன. ஆனால், ஆசிய விளையாட்டு போன்ற போட்டிகளில் பங்கேற்பது அரிதான வாய்ப்பு. ஒவ்வொரு வீரரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

எங்களது மிகப்பெரிய கனவை நிறைவேற்ற அனைவரும் முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com